அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
திருத்தங்கலில் சுகாதார வளாகக் கட்டடம் அகற்றம்
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பயன்பாட்டில் இல்லாத இரு சுகாதார வளாகக் கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதியில் பயன்பாடின்றி 5 சுகாதார வளாகங்கள் உள்ளன. இந்த சுகாதார வளாகக் கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு, சிவகாசி பசுமை மன்ற நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, இரண்டு சுகாதார வளாகக் கட்டடம் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
இந்த நிலையில், மேலும், 3 சுகாதார வளாகக் கட்டடங்களையும் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை மன்றத்தினா் கோரிக்கை விடுத்தனா்.