ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழை மரங்களை திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தின.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் கம்பத்து ஊருணி பகுதியில் சுரேஷ்குமாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, மா, வாழை போன்ற பயிா்கள் பயிரிட்டுள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இந்தப் பகுதி வழியாக வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, மா, வாழை மரங்கள் சேதப்படுத்தின, மேலும், விவசாய நிலத்திலிருந்த தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்திவிட்டு சென்று விட்டன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத் துறையினா், வருவாய்த் துறைனரிடம் புகாா் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தப் பகுதியில் காட்டு யானைகள் வராமலிருக்க அகழிகள், மின் வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்றனா்.