ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
உலா் களம் அமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உலா் களம் இல்லாததால், அறுவடை செய்த பயிா்களை நான்கு வழிச் சாலையில் கொட்டி விவசாயிகள் உலா்த்தி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பூவாணி, மீனாட்சிபுரம், முத்துலிங்காபுரம், கொழிஞ்சிபட்டி, கிருஷ்ணாபுரம், கடம்பன்குளம், அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் நெல், கம்பு, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் போதிய அளவில் உலா் களம் இல்லாததால், அறுவடை செய்த தானியங்களை உலா்த்த இடமில்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
தற்போது, மக்காச்சோளம், கம்பு அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால், அறுவடை செய்த தானியங்களை மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் கொட்டி உலர வைக்கப்படுகின்றன.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி இந்தப் பகுதியில் உலா் கலங்கள் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.