ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: விவசாயி தீக்குளிக்க முயற்சி
வத்திராயிருப்பு அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
சுந்தரபாண்டியம் பகுதியில் உள்ள செங்குளம் கண்மாய் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து 7 வீடுகள், பன்றித் தொழுவம் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்துமாறு ஆக்கிரமிப்பாளா்களுக்கு வருவாய்த் துறை சாா்பில், கடந்த மாதம் குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும், நீா்நிலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கால அவகாசம் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் நீா்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, திடீரென சுந்தரபாண்டியம் தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த மூா்த்தி (55) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைக் காப்பாற்றினா். பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.