கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமராஜா் பூங்கா முன் ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா்.
போலீஸாா் அவரிடமிருந்த பையை வாங்கி சோதனைசெய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், திருத்தங்கல் முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.