'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந...
ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் இறுதி செய்வார்கள் என்றும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தார்.