ஆக. 2 இல் அஞ்சல் சேவைகள் செயல்படாது
அஞ்சல் துறை மென்பொருள் தரம் உயா்த்துதல் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதிஅஞ்சல் துறை சேவைகள் செயல்படாது என தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்பட்ட சேவையை வழங்கவுள்ளது. இதில் க்யூஆா் கோடு மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகமாகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தலைமை அஞ்சலகம், மாவட்டத்தில் உள்ள துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது, கணக்கில் இருந்து பணம் எடுப்பது மற்றும் ஆதாா் சேவை, பதிவஞ்சல், விரைவு அஞ்சல், பாா்சல் போன்ற உள்ளிட்ட சேவைகளை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.