செய்திகள் :

ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

post image

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சூரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவின் தற்காலிக ஜாமீனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில் நீதிபதிகள் இலேஷ் வோரா, பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கு அடுத்ததாக செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது இடைக்கால ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விசாரிக்கும். அதன்படி, ஆசாராம் பாபுவுக்கு திங்கள்கிழமை அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்துக் கேட்டனர்.

ஜூலை 3 ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஆசாராமின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்ற விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தற்காலிக ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஆசாராம் பாபு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரது இடைக்கால ஜாமீன் மீண்டும் வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The Gujarat High Court on Tuesday extended till September 3 the temporary bail granted to self-styled godman Asaram Bapu, who was convicted in a 2013 rape case and sentenced to life imprisonment by a Gandhinagar court.

கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

மகாராஷ்டிரத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக சாலையோரத்தில் தரையிறக்கப்பட்டது. புணே மாவட்டத்தில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் ச... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும்(ஆக. 20, 21) நடைபெறவிருக்கிறது. இதி... மேலும் பார்க்க

75 டன் எடையுள்ள செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர்

75 டன் எடையுள்ள செயற்கைகோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில், கடந்த சில நாள்களாக கனமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தினால் தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையா? - கனிமொழி

பாஜகவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல என திமுக எம்.பி. கனிமொழி கூறினார். செப். 9 நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்த... மேலும் பார்க்க