செய்திகள் :

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

post image

ஆசியக் கோப்பையை ஐக்கிய அரசு அமீரக நிர்வாகத்திடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி ஒப்படைத்துள்ளார்.

தற்போது துபையில் உள்ள ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்பை, விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, இந்தியாவுக்கு கோப்பை வழங்கத் தயாரானார்.

ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரின் கைகளில் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மற்ற நிர்வாகிகள் மூலம் கோப்பையை இந்தியாவுக்கு வழங்க நக்வி ஒப்புக் கொள்ளாமல், கோப்பையைக் கையுடன் எடுத்துக் கொண்டு மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

தொடர்ந்து, இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ”ஆசியக் கோப்பை என்பது தனிநபர் சொத்துக் கிடையாது, வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்” என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஆனால், கோப்பையை வழங்க மறுப்பு தெரிவித்த நக்வி, மீண்டும் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்தால், அதில் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ புகார் அளிக்க தயாரான சூழலில், ஆசியக் கோப்பை தொடரை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை நக்வி ஒப்படைத்துள்ளார்.

விரைவில் துபையில் உள்ள பிசிசிஐ நிர்வாகத்தினரிடம் ஆசியக் கோப்பை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Naqvi hands over the Asia Cup to the United Arab Emirates!

இதையும் படிக்க : நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் உதவினார்கள் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ... மேலும் பார்க்க

யு-19 பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி தனது முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரே... மேலும் பார்க்க

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.டாஸ் வென்ற 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டு... மேலும் பார்க்க

துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?

துபை டி20 ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வினை (39 வயது) எந்த அணியும் தேர்வு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை இந்தூரில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து,... மேலும் பார்க்க

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய இளம்வீரர் சூரியவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி இரண்டு போட்ட... மேலும் பார்க்க