செய்திகள் :

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும்: முன்னாள் பாக். வீரர்

post image

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது. துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த நிலையில், ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். ஆசிய கோப்பையை வெல்வதற்கு கண்டிப்பாக இந்திய அணிக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள், நான் பாத்திருக்கிறேன், பலரும் பார்த்திருக்கிறோம்.

ஒருவரின் சிறப்பான ஆட்டம், ஒருவரின் சிறந்த பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்ல இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என நம்புகிறேன். இறுதியில், சிறந்த அணி கோப்பையை வெல்லும் என்றார்.

Former Pakistan cricketer Wasim Akram has said that India has the best chance of winning the Asia Cup.

இதையும் படிக்க: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் அபிஷேக் சர்மா!

உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

உலகக் கோப்பையை வெல்வதில் இந்திய அணி உறுதியாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறத... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற... மேலும் பார்க்க

இந்திய ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸி. மகளிரணி கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது. மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இல... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!

ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக... மேலும் பார்க்க