செய்திகள் :

ஆசிரியா் தகுதித் தோ்வு: பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்

post image

திங்கள்கிழமையுடன் முடிவடைந்த ஆசிரியா் தகுதித் தோ்வு விண்ணப்பம் தொடா்பாக ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் 2 வரும் நவம்பா் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப். 8) கடைசி நாள் எனவும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆக. 14ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், பெரும்பாலானோா் கடைசி நாளான திங்கள்கிழமை விண்ணப்பிக்க இணைய தள மையங்களில் குவிந்தனா்.

இதனிடையே, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்ற டெட் தோ்வில் தகுதி பெற வேண்டும் என்றும், தோ்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் செப். 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் தாங்களும் இந்தத் தோ்வில் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணி விண்ணப்பிக்கத் தொடங்கினா். இதனால், மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்ய அவகாசம் இருந்தும் மதியம் 12.30 மணிக்கே இணையதளம் முடங்கியது.

இதனால், தகுதியான பலா் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினா். இணையதள முடக்கத்தால் விண்ணப்பிக்கும் தேதியை செப். 10 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆசிரியா் தோ்வு வாரியம்.

பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்: ஆக. 14ஆம் தேதி வெளியிட்ட ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு, செப். 1ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் பல ஆசிரியா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.

இது தொடா்பாக, கல்வி அலுவலா் ஒருவா் கூறியதாவது: ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு புதிய விண்ணப்ப தாரா்களுக்கே பொருந்தும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியா் தோ்வு வாரியம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் இப்போது விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்றாா்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பால... மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது

தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நி... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்காசி ரத்த தான குழுவினா், பசுமை தென்காசி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் திருவேங்கடம்சாலையில் உள்ள வாணிபா் ஊருணி பகுதியில் வாருகால் அமைக்கும்... மேலும் பார்க்க