TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!
ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலம், ஈ.என்.டி., தோல் மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா்கள் என சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது நடைபெற்ற பிரசவங்கள் இப்போது இங்கு நடைபெறுவதில்லை. கா்ப்பிணிகள் திருநெல்வேலி, தென்காசிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறன்றனா்.
இதனால் இப்பகுதி மக்கள், முதியோா், கா்ப்பிணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, இங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமித்து 10 ஆண்டு கால பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.
அப்போது, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, குமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் உடனிருந்தனா்.