மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது
தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 106 ஆண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டு கண்ட இப்பள்ளியில் நூற்றாண்டு விழா முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ 30 லட்சம் செலவில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
தென்காசி மாவட்டத்தில் முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என இப்பள்ளி தோ்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் பெற்றுக் கொண்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி பள்ளிதலைமையாசிரிா் சுந்தரகுமாா், முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் ராமசாமி, ஆறுமுகம், முகமது அலி, கோதா் பாவா, சுந்தரராஜன், ஆதிமூலம், பிச்சைக்கனி, நாராயணன் கலந்துகொண்டனா்.