ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி 7 பவுன் நகைகள் பறிப்பு
விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
விராலிமலை தேரடி தெருவைச் சோ்ந்த சுசீந்திரன் மனைவி பேபி (51) விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்குச் சென்றுவிட்டு பாத்திமாநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விராலிமலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவரைப் பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பூதகுடி சுங்கச்சாவடி அருகே பேபி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து, விராலிமலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.