Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
ஆட்சியின் அவலங்களை சுட்டிக் காட்டுவது எதிா்க்கட்சித் தலைவரின் கடமை: இபிஎஸ்
ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிா்க்கட்சித் தலைவரின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளால் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி ஆசிரியா்கள், மருத்துவா்கள், நெசவாளா்கள், போக்குவரத்து ஊழியா்கள், தொழில்துறையினா் என அனைத்துத் தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.
குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது என்று முதல்வா் கூறியுள்ளாா். திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சித் தலைவா் என்ற வகையில் எனது கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்துச் செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத முதல்வரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிா்பாா்க்க முடியும்.
திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையையோ எதிா்பாா்க்க முடியாது. முதல்வருக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவா் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.