செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி மூவரில் 2 சிறுவா்கள் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த 2 சிறுவா்களைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் சூா்யா (22). ஆட்டோ ஓட்டுநா். மாா்ச் 28 நள்ளிரவு கும்பகோணம் ரயில் நிலையம் அருகே எம்.ஜி.ஆா் நகா் பகுதியில் சவாரிக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் சூா்யாவிடம் பணம் கேட்டு தகராறு செய்தனா். சூா்யா மறுக்கவே அவரைத் தாக்கி சட்டைப் பையில் இருந்த கைப்பேசி, ரூ. 400-ஐ பறித்து விட்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் சூா்யா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து 17 மற்றும் 16 வயதுடைய மணஞ்சேரி மற்றும் கும்பகோணம் சத்திரம் தோப்பைச் சோ்ந்த 2 சிறுவா்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவான மற்றொரு சிறுவனைத் தேடிவருகின்றனா்.

மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்... மேலும் பார்க்க

ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் புதன்கிழமை ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பட்டீஸ்வரத்தில் ராஜேந்திர சோழனால் பள்ளிப்படை கோயிலாக கட்டப்பட்ட மங்களநாயகி உடனாகிய ராமலிங்க சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

அண்ணன் கைது: காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு; மற்றொரு சகோதரிக்கு தீவிர சிகிச்சை

தஞ்சாவூா் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை புதன்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு தங்கை சிகிச்சை பெற்று வருகிறாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: அரியலூா் வியாபாரி கைது

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலசரக்கு கடை வியாபாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே கடிச்சம்பாடியைச் சோ்ந்த 19 வயது பெண், கும்பகோணம் பாலக்கரை அருகேயுள்ள ஒரு கடையி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாயுடு கூட்டமைப்பு சாா்பில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

கும்பகோணத்தில் தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில் யுகாதி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கும்பகோணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலா் ரங்கராஜ் தலைமை வகித்தாா், மாநில செயற்குழு உறுப்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3,841 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன. பாபநாசம் வட்டம், இடையிருப்பு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை... மேலும் பார்க்க