செய்திகள் :

தொடரும் வெறி நாய்க்கடி; மூன்றே மாதங்களில் 1.24 லட்சம் பேர் பாதிப்பு! - காரணமும், தீர்வுகளும்!

post image

2025-ம் ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள்தான் முழுவதுமாக முடிந்துள்ளது.

அந்த முதல் மூன்று மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 1.24 லட்சம் நாய் கடிகள் நடந்துள்ளது... நான்கு பேர் ரேபிஸ் நோயால் இறந்திருக்கின்றனர்.

இது கடந்த மாத இறுதியில், பொது மற்றும் தடுப்பு மருத்துவ சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவுகள்.

கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தின செய்திகளுக்கு பழகிய நம் காதுகள்... தற்போது நாய் கடி செய்திகளையும் இயல்பாக கடக்க தொடங்கிவிட்டன.

ஆனால், இது அத்தனை இயல்பாக கடக்க வேண்டிய விஷயம் அல்ல. இதுவரை இந்த நாய்களின் எளிதான டார்கெட் சிறுவர் - சிறுமியர்களாகவே இருக்கின்றனர். நாய் கடிகளின் ஒவ்வொரு சிசிடிவி கேமரா பதிவுகளும் வெளியாகும்போது மனது பதைப்பதைக்கின்றது.

எளிய டார்கெட் குழந்தைகள்
எளிய டார்கெட் குழந்தைகள்

டிவி, மொபைல் போன்களை தாண்டி சிறிது நேரம் மட்டுமே வெளி உலகை எட்டிப்பார்க்கும் நம் குழந்தைகள், இந்தக் காரணத்தினால் மீண்டும் கூண்டு கிளிகளாகவே மாறுகின்றனர்.

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கொஞ்சம் இருட்டிவிட்டாலே நாய்களை கண்டு பயந்து வெளியே வர தயங்குகின்றனர்.

நேற்றுவரை இயல்பாக நம் பின்னால் வாலாட்டி கொண்டு வந்த தெருநாய்கள் இப்போது ஏன் வெறி நாய்கள் ஆகின... நம்மை கடிக்க நம் மீது ஏன் இன்று பாய்கின்றன என்று ஆயிரம் வினாக்கள் நம் மனதில் உதிக்கும்.

அந்த வினாக்களுக்கான விடைகளை தருகிறார் சூழலியல் ஆர்வலர் கோவை சதாசிவம்.

"இன்று தெருநாய்கள் என்று நாம் கூறுகின்ற நாய்கள் ஒருகாலத்தில் காட்டு விலங்காக இருந்தன. அடுத்து நாட்டு விலங்கானது. பின்னர் வீட்டு விலங்கானது. இப்போது அவை தெருநாய்களாக மாறியுள்ளன.

விலங்கினத்திலேயே மனிதர்களை நம்பி வந்த முதல் உயிரினம் நாய். இதனால், நாய்கள் இப்போது காடற்று, வீடற்று, மரபணு அற்று கிடக்கின்றன. 'என்னது மரபணு அற்று கிடக்கின்றனவா?' என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.

இரண்டு இயல்புகள்

ஒருகாலத்தில் நாய்கள் காட்டு விலங்குகளாக இருந்தப்போது, அதன் இயல்பே கூட்டமாக வேட்டையாடுவது ஆகும். ஆனால், அது மனிதர்களோடு சேரும்போது, முதலில் அது வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை விட்டது. அதற்கு பதிலாக, மனிதர்கள் உண்ணும் உணவையே சாப்பிட பழகியது.

சூழலியல் ஆர்வலர் கோவை சதாசிவம்
சூழலியல் ஆர்வலர் கோவை சதாசிவம்

அடுத்ததாக, மனிதர்கள் சமூக வாழ்வியலில் இருந்து பிரிந்து, தனி வீடு புகும்போது, நாய்களும் தங்களுடைய கூட்டத்தில் இருந்து பிரிந்து தனி தனியாக மனிதர்களோட வாழத் தொடங்கியது. ஆக, அதன் இயல்பே முற்றிலும் மாறிவிட்டது.

மாறிய நாய்கள்

இப்போது நாம் பார்க்கும் தெருநாய்கள் என்பது அப்போதைய 'சாம்பல் நிற ஓநாய்' இனம் ஆகும்.

இப்படி மாறியது இப்போது அல்ல. இந்த மாற்றங்கள் பல நூற்றாண்டு காலங்களாக நடந்து இப்போது நாய்கள் மனிதர்களின் வாழ்க்கையோடு நன்கு இயைந்துவிட்டது. அப்படியிருக்கையில் ஏன் இப்போது நாய்கள் கடிப்பது அதிகமாகியிருக்கின்றது என்ற இயல்பான கேள்வி எழும்.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு!

இதற்கு மிக முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். இந்தக் காரணம் பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

இந்த மரபணு மாற்றங்கள் நாய்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் நடக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், நாய் கடிகள் இப்போது அதிகமாகி உள்ளன.

மரபணு மாற்றத்தால்...
மரபணு மாற்றத்தால்...

ஒப்பீடு அடிப்படையில், நாய்கள் சிறுவர் - சிறுமிகளை அதிகம் கடிக்கின்றன. எந்தவொரு உயிரினமும் தங்களால் தாக்க முடிவதை தான் இரையாக மாற்றும். அப்படி பார்க்கையில் நாய்களுக்கு சிறுவர் - சிறுமியர் தான் எளிதான இலக்கு.

கோழிகளின் பித்தப்பை

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் கோழி கழிவுகள். நகர்புறங்களில் டன் கணக்கில் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் அதன் பித்தப்பை இருக்கும்.

ஒருவர் நாய் வளர்க்கிறார் என்றால் கடைசி வரை அவர் தான் அந்த நாயை பராமரித்து வைத்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, பாதியில் நாயை ரோட்டில் விட்டுவிடக் கூடாது. இதுக்குறித்து அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

ஆண், பெண் நாய்கள்

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 கோடி தெருநாய்கள் உள்ளன. மனித நாய்கள் விகிதாசர அடிப்படையில் நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

பொதுவாக, தெருவில் ஒரு நாய் குட்டி போட்டு இருந்தால் ஆண் நாயை தான் எடுத்து சென்று வளர்ப்பார்கள். பெண் நாயை அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஒரு நாயை வீட்டிற்கு ஒருவர் எடுத்து செல்கிறார் என்றால் அதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் எல்லாம் கிடைக்கும்.

ஆனால், ரோட்டிலேயே விடப்பட்டிருக்கும் பெண் நாய்களுக்கு இது எதுவும் கிடைக்காது. கருத்தடையும் நடந்திருக்காது. இதனால், நாய்களின் எண்ணிக்கை தானாக உயர்கிறது.

அது மாதிரி, நாய்கள் தங்களது குட்டிகளை மிக கவனமாக பார்த்துகொள்ளும். அதனாலும், நாய்களின் எண்ணிக்கை குறைவதில்லை.

நாய்கள் பரமாரிப்பு அற்றவை... பாதுகாப்பு அற்றவை.

ஆண், பெண் தெருநாய்கள்
ஆண், பெண் தெருநாய்கள்

நாய்களின் உணவு பழக்கம்

முதலில், நாய்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, மாநகராட்சி அதை பிடித்துகொண்டு போய் கொன்றுவிடும். ஆனால், ப்ளூ கிராஸ் தொடர்ந்த வழக்கால் இப்போது அந்த நடைமுறை இல்லை.

நாய் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால், தேவையில்லாமல் நாய்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் வளர்க்க முடியாத சூழலில் நாய்களை தெருவில் விட்டுவிடக் கூடாது.

அரசு தெருநாய்களை குறைப்பதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்களின் பொது உணவுப்பழக்கம் மாமிசம். அதை விடுத்து, தயிர் சாதம் போடுவது மாதிரியான விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதன் உணவுப்பழக்கத்தையும், வாழ்வியல் பழக்கத்தையும் மாற்றாமல் இருப்பது நல்லது.

குழந்தைகளை தெருவில் விளையாட விடும்போது பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் தெருவில் நாய்கள் அதிகம் இருந்தால் கட்டாயம் மாநகராட்சியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துவிடுங்கள்" என்று பேசினார்.

பெருகும் நாய் எண்ணிக்கை மற்றும் அதை எப்படி கட்டுபடுத்த வேண்டும் என்பதை விளக்குகிறார் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா இணை நிறுவனர் மற்றும் தலைவர் சின்னி கிருஷ்ணா.

"கொரோனா பேரிடர்காலம் வரையில் சென்னையில் நாய்களுக்கான கருத்தடை போன்ற விஷயங்கள் சரியாக தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால், கொரோனா பேரிடரின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றவற்றை போல இந்த நடைமுறையையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

இதனால், நாய்களின் எண்ணிக்கை மிகவும் பெருகிவிட்டன.

மக்களுக்கான நலதிட்டங்களை செய்ய அரசிற்கு நாம் வரி செலுத்துகிறோம். அவற்றில் ஒன்று தான் நாய்களின் கருத்தடை. இதை செய்வதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும்.

ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா இணை நிறுவனர் மற்றும் தலைவர் சின்னி கிருஷ்ணா
ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா இணை நிறுவனர் மற்றும் தலைவர் சின்னி கிருஷ்ணா

மக்கள்...

மாநகராட்சிகள் நாய்களுக்கு கருத்தடை செய்ய மக்கள் வலியுறுத்த வேண்டும்.

நாய்களுக்கு சரியான பராமரிப்புகள் இருந்தால் அது யாரையும் ஒன்று செய்யாது. அதனால் அதன் வாழ்வியலை நாம் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

புகார் வரும்போது மட்டும் நடவடிக்கைகள் எடுக்காமல் முழு வீச்சாக அரசு, நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அது மிகவும் அறிவில் ரீதியாக நல்ல பலன் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

இயல்பு இயல்புதான்

என்ன தான் மனிதர்கள் எவ்வளவு நவீனமானாலும், நாம் இன்னும் சில இயல்பான பண்புகளை விட்டுவிடவில்லை. ஆறறிவு மனிதர்களே இப்படி என்றால், ஐந்து அறிவுள்ள நாய்களை ஒன்றும் சொல்ல முடியாது.

இது நாய்க்கு சாதகமான பேச்சு அல்ல. இது தான் நிதர்சனம்.

இதை நிதர்சனம் என்றும் கடந்துவிடக் கூடாது. அரசு கட்டாயம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

'மத்திய அரசு கூறியதுப்போல மக்கள் தொகை குறைப்பதை எங்கள் மாநிலம் சரியாக செய்தது' என்று நம் மாநில அரசு பெருமை பேசுவது சரி தான். அந்த மக்கள் நிம்மதியாக வாழ நாய்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வழி செய்ய வேண்டும்.

அரசும், தனிமனிதர்களும் என்ன செய்ய வேண்டும்?
அரசும், தனிமனிதர்களும் என்ன செய்ய வேண்டும்?

அரசும், தனிமனிதர்களும்!

தனிமனிதராக நாமும் நம் வீதிகளில் திரியும் நாய்கள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும். 'இதை நான் ஏன் செய்ய வேண்டும்?' என்று நினைக்காதீர்கள். இந்த செயல் நமக்கானதும் மற்றும் நம் சமுதாயத்திற்கானதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாய் வளர்ப்பவர்கள் தங்களது நாயை சரியாக பரமாரிக்க வேண்டும். அத்தோடு அந்த நாய்களை எதாவது ஒரு சூழலில் கைவிட்டுவிடக் கூடாது. மேலும், தெருவில் இருக்கும் நாய்களை எந்த தொந்தரவும் செய்யாமல் இருப்பது மிக மிக நல்லது.

நாய் கடி பிரச்னை சரியாகும் வரை, குழந்தைகள் விளையாட வெளியே செல்லும்போது நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம். குழந்தைகள் மட்டும் இல்லை... பெரியவர்களும் நாய்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் தெரு நாய்களும், ரேபிஸ் நோயும் இல்லை என்று பெருமையாக சொல்கின்றன. இதற்கு காரணம், அந்த நாடுகள் நாய்களுக்கான தனி சட்டம் இயற்றி, அவற்றிற்கு தேவையான அடைக்கலம், உணவு, தடுப்பூசிகள் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது. இந்த மாடலை இங்கேயும் பின்பற்றலாம்.

கூடிய சீக்கிரம் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பலாம்... அதுவரை கொஞ்சம் உஷாராக இருப்போம் மக்களே!

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க