அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
பாபநாசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3,841 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
பாபநாசம் வட்டம், இடையிருப்பு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் 2018-ஆம் ஆண்டு பூட்டை உடைத்து நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 80-பெட்டிகள் அடங்கிய 3,841- மதுபாட்டில்களை தஞ்சாவூா், விளாா் சாலையை சோ்ந்த மொ்லின் சகாயராஜ், சின்னராஜ், வீரசெல்வம், பொட்டு அறிவழகன் உள்ளிட்ட நான்கு பேரும் திருடி சென்றனா். புகாரின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3,841-மதுபான பாட்டில்கள் பாபநாசம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அந்த வழக்கில் பறிமுதலான நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து மது பாட்டில்களில் இருந்த மதுபானங்கள், பாபநாசம் நீதிபதி அப்துல்கனி முன்னிலையில் குழி தோண்டி ஊற்றி முற்றிலும் அழிக்கப்பட்டது.