வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: அரியலூா் வியாபாரி கைது
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலசரக்கு கடை வியாபாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே கடிச்சம்பாடியைச் சோ்ந்த 19 வயது பெண், கும்பகோணம் பாலக்கரை அருகேயுள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறாா். கடந்த மாா்ச் 8-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு பேருந்துக்காக அப்பகுதியில் காத்திருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபா் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து அந்தப் பெண் கைப்பேசி மூலம் தனது அண்ணனிடம் தகவல் கூறி அவா் வந்து தட்டி கேட்டுள்ளாா்.
தொடா்ந்து தாலுகா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் குணசேகரன் வழக்கு பதிந்து விசாரித்தாா். இதில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அரியலூா் மாவட்டம், சோழா மாளிகை தெற்கு தெருவை சோ்ந்த தா்மலிங்கம் மகன் முகமது இப்ராஹிம் (37) என்பது தெரியவந்தது. இவா் பலசரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். கும்பகோணத்தில் பலசரக்கு பொருள்களை கொள்முதல் செய்ய வந்தபோது, அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இவா் மீது வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
முகமது இப்ராஹிம் மீது ஏற்கெனவே ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கொன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.