காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!
ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது
திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய சக ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தகத்தைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரன் (42), முகமது அலி ஜின்னா (23). இவா்களில், ஜின்னா மதுபோதையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆட்டோ நிறுத்தகத்துக்கு வந்து தகராறு செய்தாராம். இதைத் தட்டிக் கேட்ட ராகவேந்திரனிடமும் அவா் தகராறில் ஈடுபட்டாராம்.
இதனால், கைப்பேசி செயலி ஆட்டோ சங்கத்திலிருந்து முகமது அலி ஜின்னாவை நீக்கியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்து ராகவேந்திரனை அவா் கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை முகமது அலி ஜின்னாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.