ஆட்டோ-காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
தேனி-கம்பம் சாலையில் ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (37). இவா், தருமபுரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் சிலரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உப்பாா்பட்டி நோக்கிச் சென்றுகெண்டிருந்தாா். தேனி- கம்பம் சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகே ஆட்டோ சென்ற போது, இதன் மீது எதிரில் சென்னையைச் சோ்ந்த அஜீத் ஓட்டி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த ராதா (35), மலா்கொடி (39), சரஸ்வதி (45), சரவணக்குமாா் (39) ஆகியோா் காயமடைந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து காா் ஓட்டுநா் அஜித் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.