'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
ஆட்டோ மீது லாரி மோதல்: 4 போ் காயம்
ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் முகமது சாதிக் (29). ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், நாகலாபுரத்திலிருந்து 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் முகமது சாதிக், ஜோதி (28), பிரவீன் (30) மற்றும் அசோக் (29) ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா். உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, அவசர வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.