செய்திகள் :

`ஆணா பொறந்து, திருநங்கையா மாறிய என்னை... ; வாழ்க்கை பூர்த்தி ஆகிருச்சு’ - வைரல் அனுஶ்ரீ ஷேரிங்க்ஸ்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் பங்கெடுப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து திருநங்கைகள் அங்கு ஒன்று கூடுவார்கள்.

இந்த ஆண்டு நடந்த முடிந்த கூத்தாண்டவர் திருவிழா மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறார் திருநங்கை அனுஶ்ரீ. இவரைப் பார்ப்பவர்கள் எல்லாரும், 'பெண்களே இவரின் அழகில் தோற்றுவிடுவார்கள்', திருநங்கை என்றே சொல்ல முடியாது' என கமெண்ட் செய்து வருகிறார்கள். யார் இந்த அனுஶ்ரீ... அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

அனுஶ்ரீ
அனுஶ்ரீ

என் வாழ்க்கை மொத்தமும் மாறுன மாதிரி இருக்கு!

"ரொம்ப சந்தோசமா இருக்கு. விகடன் மாதிரி ஒரு மீடியால நான் பேசப்படுறேங்கிறதே வெற்றியாகத் தான் பார்க்கிறேன். ஒரு நாள் நைட்ல என் வாழ்க்கை மொத்தமும் மாறுன மாதிரி இருக்கு. எங்க போனாலும் மக்கள் அன்பை அள்ளிக் கொடுக்குறாங்க. ஒரு காலத்துல யாராவது அன்பு செய்ய மாட்டாங்களானு ஏங்கியிருக்கேன். இப்போ உலகமே அன்பு காட்டுது" என படபடக்கிறார் அனுஶ்ரீ.

வீட்டை விட்டு ஓடிபோயிட்டேன்

"சொந்த ஊரு கோயம்புத்தூர். பத்து வயசுல என் உடல்ல நடந்த மாற்றங்களை என்னால் உணர முடிஞ்சுது. ஆனா வீட்ல சொல்ல பயம். ஸ்கூல் போயிட்டு வரும்போது திருநங்கைகள் கூட்டத்தை பார்த்தேன். எனக்கும் பூ வெச்சுக்கணும், புடவை கட்டிக்கணும்னு ஆசை. அதை அவங்ககிட்ட சொன்னேன். 

'உடனே முடிவு எடுக்காத, கொஞ்ச நாள் போகட்டும்'னு சொன்னாங்க. டெய்லி ஸ்கூல் விட்டு வரும் போது அவங்க கூட நேரம் செலவிட ஆரம்பிச்சேன். 

அனுஶ்ரீ
அனுஶ்ரீ

எங்க வீட்ல என்கிட்ட இருக்க மாற்றங்களை பார்த்துட்டு அடிச்சாங்க. ஒரு கட்டத்துல அடியை தாங்க முடியல. அதான் யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு ஓடிபோயிட்டேன். திருநங்களை நிறைய பேர் பாம்பேல இருக்கிறதா கேள்விப்பட்டேன். பாம்பேக்கு போனேன். ட்ரெயின்ல டிக்கெட் எடுக்ககூட காசு இல்ல. நான் திருநங்கைனு சொன்னதும் டி.டி. ஆர் எதுவும் கண்டுக்கல.

ஆரம்பத்துல வீட்ல ஏத்துக்கல

17 வயசுல பாம்பேல தனி ஆளா நின்னேன். கையில சுத்தமா காசு கிடையாது. திருநங்கைகள் எங்க இருப்பாங்கனு தெரியல. ஒரு ஆட்டோல ஏறுனேன். திருநங்கைகள் இருக்க இடத்துக்கு போகணும்னு சொன்னேன். அந்த ஆட்டோக்காரரருக்கு கொடுக்க என் இடுப்புல இருந்து வெள்ளி அரைஞாண் கொடியை கழட்டி வெச்சிருந்தேன். ஆனா, திருநங்கை அம்மா ஒருத்தர் எனக்காக 100 ரூபா கொடுத்தாங்க. என்னை திருநங்கை கூட்டத்துல சேர்த்து விட்டாங்க.

அனுஶ்ரீ
அனுஶ்ரீ

தினமும் யாசகம் கேக்க போவேன். திருமணம், பிறந்தாள் நிகழ்ச்சிகள்ல டான்ஸ் ஆடுவேன். கிடைச்ச காசை சேர்த்து வெச்சு நாலு வருசத்துல மார்பக சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன். 24 வயசுல சென்னைக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல வீட்ல ஏத்துக்கல. என்னோட அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் விபத்து ஆயிடுச்சு. அப்போ அவங்கள பார்க்க போனப்போ என்னை ஏத்துக்கிட்டாங்க. இப்போ சில மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு போயிட்டு வருவேன். 

எனக்கு ஒரு காதல் இருந்துச்சு

சரியான சாப்பாடு இல்லாதது, கிடைச்சதை சாப்பிடுறது, அறுவை சிகிச்சைனு நிறைய காரணங்களால உடல் எடை அதிகமாகிருச்சு. 107 கிலோ ஆகிட்டேன். என் ஃப்ரெண்ட் வெயிட் லாஸ் பண்றதுக்கான சர்ஜரி பத்திசொன்னாங்க. பெண்ணா இருக்கணும், அழகா இருக்கணும்னு தான் உறுப்பையே மாற்றி சிகிச்சை பண்ணிக்கிட்டேன். வெயிட் குறைஞ்சா இன்னும் அழகா, நளினமா இருப்பேன்னு தோணுச்சு. அதனால, அதற்கான அறுவை சிகிச்சையும் பண்ணிக்கிட்டேன்" என்றவரின் முகம் சட்டென்று வாடுகிறது.

"எனக்கு ஒரு காதல் இருந்துச்சு. வாழ்க்கையே அவங்கதான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, 'உன்னால குழந்தை பெத்துக்க முடியாது, எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க'னு விட்டுட்டு போயிட்டாங்க. ஒரு பொண்ணு குழந்தை பெத்துக்க முடியலைனா, 'இப்படி விட்டுட்டு போவாங்களா?'னு இப்போ வரை வருத்தப்படுறேன்.

இயற்கை இதுதான்னு புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிற வாழ்க்கைத் துணையை தான் நிறைய திருநங்கைகள் தேடுறோம். ஆனா, பெரும்பாலான திருநங்கைளுக்கு அப்படியான வாழ்க்கை அமையறது இல்ல" என்று அமைதியானவரிடம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது பற்றிக் கேட்டோம்.

அனுஶ்ரீ
அனுஶ்ரீ

"சென்னையில தங்கி மாடலிங், ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டு இருக்கேன். இந்த வருசம் தான் முதல் முறையா கூத்தாண்டவர் திருவிழாவிற்கு போனேன். என்னை பார்த்த எல்லாரும் , 'பொண்ணு மாதிரியே இருக்கீங்க'னு சொன்னாங்க. யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட்டாங்க. நிறைய இடத்துல அந்த வீடியோ ஷேர் ஆகிருக்கு. கமெண்ட்ஸ் எல்லாமே பாசிட்டிவா வந்துருக்கு. ஆணா பொறந்து, திருநங்கையா மாறிய என்னை உலகமே பொண்ணுனு சொல்லும் போது வாழ்க்கை பூர்த்தி ஆன மாதிரி இருக்கு.

இதுக்குத் தான் இத்தனை கஷ்டமும். ஹார்மோன் மாற்றத்தால படிப்பை தொலைச்சேன், எதிர்காலத்தை தொலைச்சேன், நிறைய அவமானப்பட்டேன். ஆனா, இப்போ மக்களோட அன்பை சம்பாதிச்சு இருக்கேன். அன்புக்காக ஏங்கிய எனக்கு மக்களோட அன்பு மனநிறைவா இருக்கு" என்றூ விடைகொடுக்கிறார் அனுஶ்ரீ.

`நிம்மதியான தூக்கம் வேண்டுமா?’ பெட் ரூம் லைட் முதல் கட்டில் வரை... செக்லிஸ்ட்!

நவீன உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் 9 மணிக்கு வேலைக்கு கிளம்பினால் இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு செல்வோம். தூங்கும் நேரம் மட்டும் தானே வீட்டில் இருப்போம். ஆனால் அந்த தூங்கும் நேரம் என்பது... மேலும் பார்க்க

``காத்தவராயன் கதைப்பாட்டை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தியவர்'' - மறைந்த கிராமியக் கலைஞர் வெங்கடேசன்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கிழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 93 வயதான இவர் கிராமிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கதைப்பாட்டு சொல்வதில் சிறந்து விளங்கியவர். கோயில் திருவிழாக்க... மேலும் பார்க்க

தேசிய கொடியேந்தி வந்த உரிமையாளர், தடுப்பை உடைத்த மாடு - கோவையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின்‌ மீதிருந்த தடையை நீக்கச் சொல்லி 2017‌ நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஐல்லிக்கட... மேலும் பார்க்க

ஜெயலலிதா, பானுமதி, சாவித்ரியை ஃபாலோ செய்யும் நயன்தாரா, வாணி போஜன் - ரிப்பீட் மோடில் ஃபேஷன் டிரெண்ட்!

அது ஒரு கேஷுவல் ஷாப்பிங் நாள். ஒரு பிரபல மால்ல இருக்க பிராண்டட் டிரஸ் கடைக்கு விசிட் அடிச்சேன். அங்கே ஒரு வெள்ளை கலர் டீ சர்ட்டும், ஆலிவ் கிரீன் கலர் பேகி பேண்டும் என்னை 'வா... வா...'னு கூப்பிட, அதை ட... மேலும் பார்க்க

வீடு: முதுகு, கை, கால் வலி வராமல் இருக்க... உங்கள் வீட்டு கிச்சனில் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

ஒரு வீட்டில் கிச்சன் என்பது முக்கியமான அங்கம். அதன் வடிவமைப்பு சரியாக இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். கிச்சன் வடிவமைப்பிற்கு சில விதி முறைகள் உள்ளன அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்... மேலும் பார்க்க