'ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும்' - கனிமொழி
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்துச் சீரானதையடுத்து ஆறு நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி வனத்துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமின்றி சேலம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்தும், முட்டல் ஏரிப் பகுதியில் படகு சவாரி செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த, 11ம் தேதி முதல், கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் ஆறு நாள்களுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தற்போது ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்த மகிழ்ந்து வருகின்றனர்