'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vi...
ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்க விழா நிகழ்ச்சியின் போது, வரவேற்பு பதாகையில் மக்களவை உறுப்பினரின் பெயர், படம் இல்லாதது குறித்து மேடையில் ஆட்சியர் முன்னிலையில் தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை நான்தான் வழங்குவேன் என்று கூறி, தங்க. தமிழ்ச்செல்வன் கையிலிருந்த சான்று அட்டையை ஆ. மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் ஒரே கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியது.