செய்திகள் :

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

post image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் 'முட்டா பயலே' என சொல்லி மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி நகரில் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் குறிப்பிடப்படுள்ளதாவது, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனை கண்டித்து ஒட்டபட்ட போஸ்டர்

கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த போஸ்டர் ஒட்டியது யார்? திமுகவை சேர்ந்தவர்கள் தான் ஒட்டியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shibu Soren: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஷிபு சோரன் (81) சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவ... மேலும் பார்க்க

``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' என்று கூறி வருகிறார்.இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு. தற்போது நாடாளும... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவை உறுதி செய்யும் ஹெச்பிஏ1சி (HbA1c) டெஸ்ட்; உண்மையிலேயே அவசியம்தானா?

Doctor Vikatan: ஒருவருக்கு சர்க்கரைநோய்இருப்பதைக் கண்டுபிடிக்க, சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்யப்படுகிறரத்தப் பரிசோதனைகள் போதுமானவையாக இருக்காதா.... பிறகு ஏன், ஹெச்பிஏ1சி எனப்படும் மூ... மேலும் பார்க்க

OPS: ``கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும்'' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொர... மேலும் பார்க்க

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' - விளக்கும் நிபுணர்

'நினைவில் கொள்ளுங்கள்... இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது...' என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது இந்தியாவில... மேலும் பார்க்க