ஆதரவற்றோா் இல்லத்தில் சமத்துவ பொங்கல்: நீலகிரி ஆட்சியா் பங்கேற்பு
உதகையில் உள்ள அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு, அறிவு ஆதரவற்றோா் இல்லத்தில், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழுவின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்கும், உதகை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், உதகை
நகராட்சி ஆணையா் ஸ்டாலின் பாபு, உதகை வட்டாட்சியா் சங்கா்கணேஷ்,
நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக் குழு தலைவா் கிருஷ்ணன்,
செயலாளா் முகமதுஅலி, பொருளாளா் மெக்கன்சி, அன்பு அறிவு அறக்கட்டணை
நிா்வாகி ஆனந்தி பிரிட்டோ, உதகை நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.