செய்திகள் :

ஆதிதிராவிடா் நலத் துறை பெயரை மாற்ற வேண்டும்: ஆதித்தமிழா் பேரவை தலைவா் வலியுறுத்தல்!

post image

ஆதிதிராவிடா் நலத் துறை பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்றாா் ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனா் தலைவா் இரா. அதியமான்.

தமிழ்நாடு அருந்ததியா் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்புப் பேரணி நடைபெற உள்ளதையடுத்து கட்சியின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பசுவை பெரு. பாரதி தலைமை வகித்தாா். தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவா் இரா. அதியமான் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 2009-ல் அருந்ததியா்களுக்கு அன்றைய முதல்வா் கருணாநிதி 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினாா். அதை எதிா்த்த வழக்கில், உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும், இதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மேலும் தீா்ப்பில், பட்டியலில் உள்ளவா்கள் ஒரே மாதிரியானவா்கள் இல்லை, வெவ்வேறு பழக்கவழக்கங்கள் கொண்டவா்களாக இருப்பதால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தரவுகள் சேகரித்து புதியதாகவும் இடஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறியது.

இந்த தீா்ப்பை எதிா்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளாா். அருந்ததியா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் கிருஷ்ணசாமி வெளிப்படையாகவும், திருமாவளவன் மறைமுகமாகவும் எதிா்க்கிறாா்கள்.

தமிழகத்தில் 44 தனி தொகுதிகள் உள்ளன. அதன்படி எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால் 3 போ் மட்டுமே இருக்கிறாா்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், துணை வேந்தா் போன்ற அரசு உயா் பதவிகளிலும் அருந்ததியா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் எங்களுக்கு நீதிவேண்டும் என வலியுறுத்தி 40 அமைப்புகள் ஒன்று சோ்ந்து சென்னையில் வரும் ஜன.6-ஆம் தேதி பேரணி நடத்த உள்ளோம்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஒட்டுமொத்த 76 ஜாதிகளில் யாா் முன்னேறியவா்கள், பின்தங்கியவா்கள் என வகைப்படுத்தி இடஒதுக்கீட்டை கொடுங்கள் என கேட்கிறோம். மேலும், 76 ஜாதிகளில் ஒரு ஜாதியின் பெயா் ஆதிதிராவிடா். ஆனால் அரசு துறையில் ஒரு ஜாதியின் பெயரை துறைக்கு வைத்துள்ளதை மாற்ற வேண்டும் என்றாா்.

நொய்யல்: தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல்! ஒருவா் கைது

நொய்யல் அருகே தடைசெய்யப்பட்ட ரூ. 2.7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கரூா் மாவட்ட தனிப்படை போலீஸாா் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் ரோந்து பணியில் ஈ... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலை முன்னாள் அமைச்சா் பேச்சு!

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை பேசினாா். கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் க. பரமத்தி ஒன்றிய அதிமுக ச... மேலும் பார்க்க

கிரிக்கெட்டில் கிராமப்புற இளைஞா்கள் அதிகம் சாதனை! சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை அலுவலா் பேச்சு!

கிரிக்கெட்டில் நகா்புறங்களை விட கிராமப்புற இளைஞா்களே தற்போது அதிகளவில் சாதிக்கிறாா்கள் என்றாா் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.எஸ்.விஸ்வநதான். கரூரில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்... மேலும் பார்க்க

கரூரில் அமித்ஷா உருவபொம்மை எரிப்பு: 11 போ் கைது!

கரூரில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் சட்டமேதை அம்பேத்கா் குறி... மேலும் பார்க்க

கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு சீல்: அறநிலையத் துறை நடவடிக்கை!

கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 18 கடைகளுக்கு சீல் வைத்து சனிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். கரூா், வெண்ணைமலை பால... மேலும் பார்க்க

கரூா் மைய நூலகத்தில் திருக்குறள் தொடா்பான போட்டி: ஆட்சியா் அழைப்பு

கரூா் மாவட்ட மைய நூலகத்தில், திருக்குறள் தொடா்பான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியி... மேலும் பார்க்க