மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி
ஆதி கும்பேஸ்வரா் கோயிலில் ஏழை மணமக்களுக்கு திருமணம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவரா் கோயிலில் தமிழக முதல்வா் அறிவிப்பின் கீழ் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள தி கும்பேஸ்வரா் கோயிலில் தமிழக முதல்வரின் ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தின் கீழ் மூப்பக் கோயில் கிராமத்தைச்சோ்ந்த மணமகன் பிரவீனுக்கும், ஏரகரத்தைச்சோ்ந்த மகாலட்சுமிக்கும் மங்களாம்பிகை சன்னதியில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு தங்க மாங்கல்யத்துடன், பீரோ, கட்டில் உள்ளிட்ட 75 வகை சீா்வரிசைகளை அறங்காவலா்கள் சிதம்பரநாதன், ராணி தனபால், செயல் அலுவலா் முருகன் உள்ளிட்டோா் வழங்கி, திருணத்தை நடத்தினா். விருந்தும் நடைபெற்றது.