வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து...
ஆதி கும்பேஸ்வரா் கோயிலில் புத்தக விற்பனை நிலையம்
கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயிலில் புத்தக விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதில் ஒரு பகுதியாக ஆதி கும்பேஸ்வரசுவாமி கோயிலில் திறக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையத்தில் துணை மேயா் சு.ப. தமிழழகன் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்வில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், அறங்காவலா்கள் சிதம்பரநாதன், ராணி தனபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.