PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.
செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வழியில், சுமாா் 300 பயனாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உத்தரவின்பேரில், ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா் மணிகண்டன், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து முள்புதா்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சீமைக் கருவேல் முள்புதருக்குள் மலைப் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனா். பின்னா், அந்த மலைப் பாம்பை பாதுகாப்பாக ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் விட்டனா்.