ஆபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ்? எலி போல பாகிஸ்தான்!
ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து
ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகிக்கும் நடைமுறையை ஜூன் 1 முதல் நிறுத்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
இந்த நடைமுறையில் நிகழும் குளறுபடிகள் காரணமாக மீண்டும் நியாய விலைக் கடைகள் மூலம், பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வீட்டிற்கு ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் நடைமுறை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகம் செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.