செய்திகள் :

ஆந்திர முதல்வர் குறித்த தரக்குறைவான பதிவு..! காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் ஆர்ஜிவி!

post image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவண் கல்யாண், அவர்களது குடும்பத்தினர்கள் குறித்து ஆர்ஜிவி எனப்படும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது தரக்குறைவான பதிவுக்கு விளக்கமளிக்க காவல் நிலையத்தில் ஆஜரானார்.

ஆந்திராவிலுள்ள ஓங்கோல் காவல் நிலையத்தில் இது குறித்து விளக்கமளிக்க ஆர்ஜிவி ஆஜரானார். காவலதிகாரி என்.ஸ்ரீகாந்த் பாபு இவரை விசாரித்தார்.

என்ன பிரச்னை?

முதல்வர், அவரது மகன் நாரா லோகேஷ் புகைப்படங்களை எடிட் செய்த புகைப்படங்களை 2024 தேர்தலுக்கு முன்பும் பின்புமாக இயக்குநர் ஆர்ஜிவி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் இடைநிலை செயலாளர் ராமலிங்கம் அளித்த புகாரினால் நவ.11, 2024இல் ஆர்ஜிவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆர்ஜிவியின் மீது 336 (4), 353(2), 356 (2), 61 (2), 196, 352, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான நோட்டீஸ்கள்

நவ.19ஆம் தேதி இவருக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆர்ஜிவி அதற்கு ஆஜராகாமல் அவரது வழக்கறிஞரை அனுப்பியிருந்தார்.

பின்னர் மீண்டும் நவ.25ஆம் தேதி புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையும் புறக்கணித்த ஆர்ஜிவி ஆந்திர உயர்நீதி மன்றத்தை அணுகினார். நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. ஆனால், விசாரணைக்காக ஆஜராகும்படி உத்தரவிட்டது.

ஆர்ஜிவி மீது இதே குற்றச்சாட்டில் 5 வழக்குகள் இருக்கிறது. குற்றத்துக்காக 5 மாவட்டங்களில் 5 புதிய வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன ட்விட் செய்தேன் என ஞாபகமில்லை

இது குறித்த விசாரணையில் ஆர்ஜிவி, “நான் ட்விட்டரை (தற்போதைய எக்ஸில்) மிகவும் அதிகமாக உபயோகிப்பேன். நான் ஆயிரம் முறை ட்விட் செய்திருக்கிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு என்ன ட்விட் செய்தேன் என எனக்கு ஞாபகமில்லை. எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், நீதிமன்றம் இதற்காக என்ன தண்டனை அளித்தாலும் கீழ்படிந்து நடப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் புதிய புரட்சியை உண்டாக்கியவராக அறியப்படும் ராம் கோபால் வர்மா தற்போது படங்கள் எதுவும் இயக்காமல் வணிகத்துக்காக யூடியூப்பில் குறும்படங்களை இயக்கி வருகிறார்.

அடிக்கடி சர்ச்சை கருத்துகளைக் கூறி பிரச்னையில் சிக்குவதும் அவருக்கு வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர்: ரச்சிதாவின் கவர்ச்சி பாடல் விடியோ!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள ஃபயர் படத்திலிருந்து கவர்ச்சிப் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல் நடிகையாக தொடங்கி தமிழில் மிகவும் பி... மேலும் பார்க்க

துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்த விடாமுயற்சி? ரசிகர்கள் அதிருப்தி!

நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் முதல்நாள் வசூல் துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் வ... மேலும் பார்க்க

விடாமுயற்சி படத்தைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்..!

இயக்குநர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் ந... மேலும் பார்க்க

மெத்வதெவ் அதிா்ச்சித் தோல்வி

ராட்டா்டாம் : ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதிச்சுற்று வீரரிடம் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். உலக... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் கால்பந்து

கோவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் கால்பந்தாட்டத்தில் விளையாடிய எஃப்சி கோவா - ஒடிஸா எஃப்சி அணியினா். இந்த ஆட்டத்தில் கோவா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் கோவாவுக்கு இது ... மேலும் பார்க்க