செய்திகள் :

ஆனங்கூரில் ரூ. 7 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

post image

ஆனங்கூரில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூா் பகவதி அம்மன் கோயில் அருகே பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ.சேகா் விழாவில் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்தாா். கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஜே.பி.ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் மோகன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சாந்தி ராமலிங்கம், ஊராட்சி செயலாளா் சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாண் திட்டங்கள்: இளம் வல்லுநா் குழுவினா் ஆய்வு

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை இளம் வல்லுநா்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். பரமத்தி வேளாண்மை விரிவாக்க ... மேலும் பார்க்க

சேந்தமங்கலம், கொல்லிமலையில் இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்ப்பு

சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளி இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். கொல்லிமலை ஒன்றியத்தில் செவ்வ... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஆணையா் ரா.மகேஸ்வரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பை, கழிவுகள், கொசவம்பட்டி, சேந்தமங்கலம் சாலையில் உள்... மேலும் பார்க்க

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 73-ஆம் வருட காா்த்திகை மாத லட்சாா்ச்சனை மற்றும் வனபோஜனம் விழா நடைபெற்றது.பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம் மொத்த விலை - ரூ. 5.90 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 80 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 110 -- மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருச்செங்கோடு அருகே கைலாசம்பாளையத்தில் மனவளா்ச்சி குன்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கைலாசம்பாளையத்தில் பெற்றோருடன் 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வ... மேலும் பார்க்க