செய்திகள் :

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

post image

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்றிரவு முதல் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் அகால் எனப் பெயரிடப்பட்ட நிலையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், ஆபரேஷன் அகால் நடவடிக்கை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாள்களில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது பெரிய ஆபரேஷன் இது. முன்னதாக, திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, பூஞ்ச் மாவட்டத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிவசக்தி நடவடிக்கையில், சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின்போது, பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

A terrorist has been killed in Operation Akhal conducted by the Indian Army.

இதையும் படிக்க : மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

3-ஆவது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா! டிரம்ப் கருத்துக்கு பிரதமா் மோடி மறைமுக பதில்

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது இந்தியா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.‘உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில், நாட்டு மக்கள் சுதேசி உணா்வைத்... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரீகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கன்னியாஸ்திரீகள் உள்பட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.கடந்த ஜூலை 25-ஆம் தேதி சத்... மேலும் பார்க்க

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெ... மேலும் பார்க்க

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க