செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

post image

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று அதிகாலை 1 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை தாக்கியது.

ட்ரோன்கள் உதவியுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானும் பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் மத்திய அரசு எல்லைகளை மூடி இருக்கிறது. பாகிஸ்தானையொட்டிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கண்டதும் சுட உத்தரவு..!

அதோடு எல்லையோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோடு ராஜஸ்தான் மாநிலம் 1037 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. எல்லையில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தென்பட்டால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தியா முழுவதும் 25 விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 10ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், லே, ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், ஜோத்பூர், சிம்லா, ஜாம்நகர், முந்த்ரா, போர்பந்தர், கண்ட்லா, புஜ் போன்ற 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுகோய்-30 ரக விமானங்கள் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்கும் விதமாக ஜெய்சாலிமர், ஜோத்பூர் போன்ற நகரங்களில் நள்ளிரவில் இருந்து அதிகாலை 4 மணி மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அனைத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்களின் விடுமுறையை முதல்வர் ரத்து செய்துள்ளார்.

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

'பதற்றம்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடை... மேலும் பார்க்க

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... மேலும் பார்க்க

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்; துரைமுருகனிடமிருந்து கனிம வளத்துறை பறிப்பு!

தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்... மேலும் பார்க்க