செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

post image

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

இதில், அங்கு வரவிருந்த 65 விமானங்கள் மற்றும் புறப்பட வேண்டிய 66 விமானங்களும் இன்று (மே 7) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அமெரிக்க விமானம் உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்தும் ரத்தாகியுள்ளது.

இதுகுறித்து தில்லி விமான நிலையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: ”வான்வழித் தடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் சில விமானங்களின் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே, பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புக் கொண்டு மாற்றுப் பயணத் திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளனர்.

முன்னதாக, தில்லியிலுள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி

புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் குறி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக காஷ்மீரில் நிவாரண முகாம்கள்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அங்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்கு எல்லையில் ராணுவ தளபதிகள் உடன் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஞாயிற்று... மேலும் பார்க்க

எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை: மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 11) மாலை தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க