செய்திகள் :

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

post image

ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய ஆப்கன் மக்கள் பயணித்த பேருந்து, நேற்று (ஆக.19) இரவு இருசக்கர வாகனம் மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில், வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த சுமார் 76 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும், கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.20) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது. இதுவரை, 19 குழந்தைகள் பலியானது உறுதி செய்யப்பட்டதாகவும், பலினாவர்களின் உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத நிலையில் எரிந்துள்ளதாகவும், அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையிலேயே தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2024-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் மத்திய ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சுமார் 52 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

The death toll from a bus carrying migrants caught fire in Afghanistan has risen to 78.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில... மேலும் பார்க்க

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக் கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப்... மேலும் பார்க்க

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிக... மேலும் பார்க்க

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க