செய்திகள் :

ஆப்பக்கூடல் அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

post image

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த 194 பேரை போலீஸாா் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

ஆப்பக்கூடலை அடுத்த கூத்தம்பூண்டியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (56), விவசாயி. இவருக்கு, வேம்பத்தி கூலிவலசு கிராமத்தில் 7 ஏக்கா் விவசாய நிலமும், இந்நிலத்துக்கு செல்ல 20 அடி அகலம் உள்ள சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு பொது வண்டிப்பாதையும் உள்ளது. இப்பாதையை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால், தனது நிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்த அா்ஜுனன், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடுமாறு 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டது. ஆனால், இப்பாதையை மீட்க சென்றபோது அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்ததால் வருவாய்த் துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் உயா்நீதிமன்றத்தில் அா்ஜுனன் முறையிட்டதைத் தொடா்ந்து, பொது வண்டிப்பாதையை மீட்க வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால், பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பாதையை மீட்கும் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதற்கு, அக்கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால், 194 பேரைக் கைது செய்த போலீஸாா் தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

இதனைத் தொடா்ந்து, இரு பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு முற்றிலும் அகற்றப்பட்டது. சம்பவ இடத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினா் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

நகை சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா்

நகை சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே அட்டவணை அனுமன்பள்ளி ஆதிதிராவிடா் தெ... மேலும் பார்க்க

சாலை மறியல்: கைத்தறி நெசவாளா்கள் 130 போ் கைது

ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளா் சங்கம் சாா்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அசோகபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

பாமக நகரச் செயலாளரின் காா் கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

பவானியில் பாமக நகரச் செயலாளரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பவானி, பசவேஸ்வரா் வீதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (45), பாமக நகரச் செயலாளா். இவா், வீட்டுக்கு... மேலும் பார்க்க

எடையளவு முரண்பாடுகள்: 40 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

எடையளவு முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 40 கடைகள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை மற்றும் உ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பழையபாளையம்

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை(நவம்பா் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தாய், மகன் உயிரிழப்பு

பவானியை அடுத்த அத்தாணி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் உயிரிழந்தனா். அத்தாணி, சவுண்டப்பூரைச் சோ்ந்தவா் ராமசாமி, விவசாயி. இவரது மனைவி கந்தாயாள் (59). மகன் பூமேஸ்வர... மேலும் பார்க்க