மகரிஷி வால்மீகி விடியோ: சர்ச்சைக்கு அக்ஷய் குமார் விளக்கம்!
``ஆமிர் கான் பட தோல்வியால்தான் திருமணம் செய்தேன்" நினைவுகளைப் பகிர்ந்த அக்ஷய்குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிகை ட்விங்கிள் கன்னாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து அக்ஷய் குமார் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
ரஜத் சர்மாவின் ஆப்கி அதாலத் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அக்ஷய் குமார் பேசுகையில்,''நடிகர் பாபி தியோலுடன் இணைந்து பர்சாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ட்விங்கிள் கன்னா, நீண்ட காலத்திற்கு நடிப்பைத் தொடர விரும்பவில்லை.

எனவே, தனது நடிப்பை கைவிட்டதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. இயக்குநர் தர்மேஷ் தர்ஷனின் மேளா (2000) படத்தில் ட்விங்கிள் கன்னா நடிகர் ஆமிர் கானுடன் இணைந்து நடித்தபோது அது ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தார்கள்.
ஆமிர் கானுடன் அவர் நடித்த மேளா படம் வெளியாகவிருந்தபோது, எங்களுக்குள் ஒரு காதல் ஏற்பட்டது. அதனால் நான் அவரிடம், 'நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்று கேட்டேன், ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. மேளா படம் சரியாக ஓடவில்லை என்றால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று என்னிடம் சொன்னார். இயக்குனர் தர்மேஷ் தர்ஷன் இயக்கி ஆமிர் கான் நடித்த படம் என்பதால் மேளா பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எல்லோரும் நம்பினர். ஆனால் ட்விங்கிள் கன்னாவின் எண்ணம் நிறைவேறியது. சாரி ஆமிர் கான் சார். உங்களது படம் சரியாக ஓடவில்லை. ஆனால் உங்களால் நான் திருமணம் செய்து கொண்டேன்" என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.