செய்திகள் :

ஆமீர் கான் - லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

post image

நடிகர் ஆமீர் கான் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு மிகப் பெரியளவில் ரசிகர் பட்டளமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அவர் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்திருப்பது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும், இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஆமீர் கான், தான் நடிகர் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகர் எனவும், இயக்குநர் லோகேஷ் நடிகர் ரஜினியின் திரைப்படம் என்று சொன்னதுமே அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து அவர் பேசியதாவது:

“நானும் இயக்குநர் லோகேஷும் வேறு திரையுலகைச் சேர்ந்தவர்கள். ஆனால், எனக்கு எல்லா வகையான திரைப்படங்களும் பிடிக்கும் என்பதால் அவருடன் பணியாற்றியது அற்புதமான அனுபவமாகவே அமைந்தது. கூலியைப் பொறுத்தவரையில், அந்தப் படத்தில் நான் ஒரு சிறிய பகுதிதான். அப்போது, தான் நாங்கள் இருவரும் ஒன்றாகப் படம் உருவாக்க முடிவு செய்தோம். அவர் (லோகேஷ்) கூலி திரைப்படத்துக்கு பின்; கைதி (2-ம் பாகம்) இயக்குகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், எங்கள் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். பெரும்பாலும், அடுத்தாண்டு (2026) இரண்டாம் பாதியில் எங்கள் படப்பிடிப்பு துவங்கும்” என அவர் பேசியுள்ளார்.

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,ராக்கி பார்த்திபன் !என் மகன் என் உயி... மேலும் பார்க்க

ஓடிடியில் ஏஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எ... மேலும் பார்க்க

கண்ணப்பா டிரைலர்!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா... மேலும் பார்க்க

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முத்த மழை விடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் அனிருத் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கும் தொழிலதிபர் காவியா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்தியை அனிருத் மறுத்துள்ளார்.தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை இசையமைப்பாளர் அனிர... மேலும் பார்க்க

நம் நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான்: அட்லி

அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் குறித்து அட்லி பேசியுள்ளார்.புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப... மேலும் பார்க்க