நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்
தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை காலை 7.43 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பாதிக்கப்பட்ட வீரேந்திர திவாரிக்கு 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், இரண்டு ஸ்கூட்டா்கள் தீயில் கருகின. வீரேந்திர திவாரி சிகிச்சைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.