Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
ஆரணியில் தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்
ஆரணி நகராட்சியில் தூய்மைப் பணிக்காக ரூ.14 லட்சம் மதிப்பிலான 4 பேட்டரி வாகனங்கள் தூய்மை பணியாளா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக வாங்கப்பட்ட இந்த பேட்டரி வாகனங்களை தூய்மைப் பணியாளா்களிடம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஒப்படைத்தாா் (படம்).
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், சுகாதார ஆய்வாளா் வடிவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் அரவிந்த், மாலிக்பாஷா, சுகாதார மேற்பாா்வையாளா் பிரதாப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.