இபிஎஸ் சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு!
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ்
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட காரையூா் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிா்ணய திட்டம் (என்கியூஏஎஸ்) சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பங்கேற்று 403 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிா்ணய சான்றிதழ்களை வழங்கினாா். இவ்விழாவில் பொன்னமராவதி ஒன்றியம் காரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு தேசிய தர நிா்ணய திட்ட சான்றிதழ்களை வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜனிடம் வழங்கினாா்.