கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்
ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தின் டீசர் அறிவிப்பு!
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.
மிஸ்டர். எக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: தெலுங்கு நடிகருடன் இணையும் இயக்குநர் மணிரத்னம்!
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் மிஸ்டர். எக்ஸ் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படத்துக்காக ஆர்யா தனது உடலைக் குறைத்து வெளியிட்ட விடியோ ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் மிஸ்டர். எக்ஸ் படத்தின் டீசர் நாளை(பிப். 22) வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.