செய்திகள் :

ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% சலுகை!

post image

பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க ரயில் நிலைய கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், யுடிஎஸ் மொபைல் ஆப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. இந்த செயலி மூலமாக டிக்கெட் எடுத்தால் சலுகையும் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓ(ட்)டிய கார்! 2 பேர் பலி! - என்ன நடந்தது?

இந்நிலையில் யுடிஎஸ் செயலியில் உள்ள ஆர்-வாலெட்டைப் பயன்படுத்தி யுடிஎஸ் மொபைல் ஆப் அல்லது ஏடிவிஎம் (ஆட்டோமேட்டிக் டிக்கெட் வென்டிங் மிஷின்) மூலம் டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று(டிச. 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்பு, ஆர்-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்டு வரும் 3% சலுகையும் தொடர்கிறது.

அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை யுடிஎஸ் மொபைல் செயலியில் உள்ள ஆர்-வாலெட் அல்லது ஏடிவிஎம் மூலமாக எடுக்கலாம்.

பாடல் வரிகளால் வந்த வினை... கவிஞர் எல் - பெஹைரி! கவிதைதான் குற்றம் - 9

‘’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்......’’ எனப் பெருமிதமாக முழங்கினான் பாரதி. ‘யாமறிந்ந மொழிகளிலே...’ எனச் சொல்லுந்தரமும் தகுநிலையுங் கொண்டு, பன்மொழியறி பாவலனாக நின்றவன் அவன். இர... மேலும் பார்க்க

ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்... மேலும் பார்க்க

கோவை அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொதுமக்கள் துரிதம... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரி... மேலும் பார்க்க

பூர்வக்குடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலம் திரும்ப ஒப்படைப்பு!

மெக்ஸிகோ நாட்டின் பூர்வக்குடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ஆணை பிறப்பித்துள்ளார்.மெக்ஸிகோவின் பூர்வீகப் பழங்குடியான ராராமுரி என்றழைக்கப்படும் ... மேலும் பார்க்க

வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசு

வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான தொகுதிகளை முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாத... மேலும் பார்க்க