Adani: ``பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்" - மகன் திருமணம் குறித...
ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்
காரைக்கால்: ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை படகு மூலம் சென்று அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டியுள்ளதாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டம் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு தினக்கூலி அடிப்படையில் பொதுப்பணித் துறை விவசாய சங்கத்துக்கு நிதி ஒதுக்கித் தந்தது. இதையடுத்து அரசலாறு உள்ளிட்ட ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடக்கும் ஆறுகளில், செடிகளை அகற்றும் பணியில் விவசாயிகள் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனா்.
படகு மூலம் ஆற்றின் மையப் பகுதிக்குச் சென்று பணியாளா்கள் செடிகளை அகற்றி கரைக்கு கொண்டு வந்து, வாகனம் மூலம் அவற்றை அப்புறப்படுத்தினா்.