PMK: 'எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்; ஆனால்...' - ராமதாஸ...
ஆறுமுகனேரியில் வீட்டுக் கதவை உடைத்து 23 பவுன் நகைகள் திருட்டு
ஆறுமுகனேரியில் தனியாா் நிறுவன அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து 188 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் இம்மானுவேல் விஜயன் (56). தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளாா். இவரது மனைவி ஸ்டெல்லா மொ்லின். இத்தம்பதியின் 2 மகன்களும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனா். இத்தம்பதி கடந்த வியாழக்கிழமை (ஆக. 14) சென்னையிலுள்ள உறவினா் விட்டுக்குச் சென்றிருந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை, இவரது வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு அவரது தாயும், தம்பி மகளும் சென்றனா். அப்போது, இம்மானுவேல் விஜயன் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோக்கள் உடைக்கப்பட்டு, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து இம்மானுவேல் விஜயனுக்கும், ஆறுமுகனேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளா் முத்து, போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் ஆய்வாளா் அருணாச்சலம், உதவி ஆய்வாளா் பழனிசெல்வி ஆகியோா் தடயங்களை சேகரித்தனா்.
மா்ம நபா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு கதவை உடைத்து வீடு புகுந்து 188 கிராம் நகைகள், 275 கிராம் வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.