செய்திகள் :

ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.

கடந்த 25ஆம் தேதி வேலைக்காக சென்ற சத்திய ஆல்வின் பின்னா் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவா்கள் அவா் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருப்பாா் என நினைத்தனா்.

இந் நிலையில் குதிரைப்பந்திவிளையில் சத்திய ஆல்வின் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் திங்கள்கிழமை நிற்பதைக் கண்ட உறவினா்கள், அருகில் தேடியபோது ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் சத்திய ஆல்வின் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

வாகனங்களில் பேட்டரி திருட்டு: பட்டதாரி கைது

தக்கலை பகுதிகளில் வாகனங்களில் பேட்டரிகளை திருடியதாக பட்டதாரி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் ( 69), ஓட்டுநா். இவருக்குச் சொந்தமான லா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே துணிக்கடை உரிமையாளரின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கருங்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஜமீல் (34). மாா்த்தாண்டம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறாா். இ... மேலும் பார்க்க

மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது: ஆதவ் அா்ஜுனா

இளைஞா்களை நம்பி மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது என்றாா் அக்கட்சியின் தோ்தல் பிரசார பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜூனா. நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 132 ஆவது ஆ... மேலும் பார்க்க

தெ.தி. இந்து கல்லூரி என்எஸ்எஸ் முகாம்

நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) முகாம், வெள்ளிச்சந்தையை அடுத்த ஈத்தன்காடு கிராமத்தில் 7 நாள்கள் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு ஆசிரியா் கல்விய... மேலும் பார்க்க

சுசீந்திரம் பெரியகுளம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சுசீந்திரம் பெரியகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பெரியகுளத்தில் படா்ந்துள்ளஆகாயத் தாமரை செடிகளை முழுமையாக அகற்றி குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். குளத்தில்... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் 21 மனுக்கள்

நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 21 மனுக்கள் பெறப்பட்டன. நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மேயா் ரெ.மகேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாந... மேலும் பார்க்க