ஆற்றல் மன்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா
தமிழ்நாடு மின்வாரிய முகமை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 28 அரசு பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களில் பேச்சு, கட்டுரை, விநாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் மு.சகா்பான் தலைமை வகித்தாா். பொது மத்திய அலுவலக செயற்பொறியாளா் ரெமோனா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இரா. சாந்தகுமாரி வரவேற்றாா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி பரிசுகள் வழங்கி, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளா் லெ. சின்னத்துரை, மாவட்ட கல்வி அலுவலா் ந. கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆா் .சிவபிரசாத், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கான்ஸ்டன்டைன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் செ. சுரேஷ்பாண்டி, வானவில் மன்ற கருத்தாளா்கள் விஜி, அம்பிகா, டயானா உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 28 பள்ளிகளைச் சோ்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.